Friday, September 3, 2010

தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?


வங்கக் கடல் மீது
தங்கத் தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்
சங்கறுத்துக் கொல்கிறது
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

வலைவீசி மீன்பிடிக்க
அலைமீது சென்றவனின்
தலைமீது குண்டுவீசும்
கொலைச் செயலும் நடக்கிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

நாவாய் படைநடத்தி
நாடுகளை வென்ற இனம்
நாள்தோறும் அகதிகளாய்
நாடிழந்து வருகிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

ஆடையை உலகுக்கு
அறிமுகம் செய்தவனை
ஆடையவிழ்த்து அம்மணமாய்
அடித்து சுட்டுக் கொல்கிறான்
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

Thursday, May 27, 2010

குறுந்தொகை -குறுஞ்சி

யாயும்  ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப்  பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

Wednesday, May 19, 2010

நீ மணி நான் ஒலி

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப்பாரென இறைவன் பணித்தான்

அறிவெனச்சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்
அன்பெனப்பாடுவது யாதெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமென யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப்பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்

"அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன்" எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகி நெருங்கி
"அனுபவம் என்பதே நான் தான்" என்றான் !

Tuesday, April 13, 2010

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி...

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ;
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே  

Tuesday, January 5, 2010

நம்பிக்கை

என் குழந்தையை வானில் தூக்கிப்போட்டேன்
அவள் சிரித்துக்கொண்டே என் கையில் தஞ்சமானால்...