Friday, April 13, 2007

பாரதிதாசன் கவிதை

கனியிடை யேறிய சுழையும்-முற்றள்
கழையிடை யேறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும்-காய்ச்சிப்
பாகிடை யேறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும்-தென்னை
நல்கிய குளிரிள னீரும்
இனியென யென்பேன்-எனினும்
தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!!

பாரதி கவிதை

தேடி சோறு நிதம் தின்று
தினம் சின்னஞ்சிரு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிரையாகி பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?