Friday, September 3, 2010
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
வங்கக் கடல் மீது
தங்கத் தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்
சங்கறுத்துக் கொல்கிறது
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
வலைவீசி மீன்பிடிக்க
அலைமீது சென்றவனின்
தலைமீது குண்டுவீசும்
கொலைச் செயலும் நடக்கிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
நாவாய் படைநடத்தி
நாடுகளை வென்ற இனம்
நாள்தோறும் அகதிகளாய்
நாடிழந்து வருகிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
ஆடையை உலகுக்கு
அறிமுகம் செய்தவனை
ஆடையவிழ்த்து அம்மணமாய்
அடித்து சுட்டுக் கொல்கிறான்
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
Thursday, May 27, 2010
குறுந்தொகை -குறுஞ்சி
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
Wednesday, May 19, 2010
நீ மணி நான் ஒலி
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப்பாரென இறைவன் பணித்தான்
அறிவெனச்சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்
அன்பெனப்பாடுவது யாதெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமென யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப்பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்
"அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன்" எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகி நெருங்கி
"அனுபவம் என்பதே நான் தான்" என்றான் !
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப்பாரென இறைவன் பணித்தான்
அறிவெனச்சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்
அன்பெனப்பாடுவது யாதெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமென யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப்பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்
"அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன்" எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகி நெருங்கி
"அனுபவம் என்பதே நான் தான்" என்றான் !
Tuesday, April 13, 2010
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி...
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ;
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே
Tuesday, January 5, 2010
Tuesday, February 3, 2009
செவிடாய் போன உலகமே...
சிறிலங்காவின் பீரங்கி சப்தத்தில் செவியிழந்த போன உலகமே
எங்களின் ஈழத்து நண்பர்களின் ஓலக்குரல் உனக்கு கேட்கவில்லையா?
பாலஸ்தீனத்தில் வெடிப்பது மட்டும் தான் குண்டா? ஈழத்தில் வெடிப்பதும்தான்...
காசாவில் இறப்பது மட்டும் தான் மனித உயிர்களா? தமிழ் ஈழத்தில் இறப்பதும் தான்...
மனிதபிமனத்தோடு எண்ணிப்பாருங்கள் ஒரு மானுட இனத்தையே வேரறுக்க பார்க்கும் சிங்கல வெறித்தனத்தை...
எங்களின் ஈழத்து நண்பர்களின் ஓலக்குரல் உனக்கு கேட்கவில்லையா?
பாலஸ்தீனத்தில் வெடிப்பது மட்டும் தான் குண்டா? ஈழத்தில் வெடிப்பதும்தான்...
காசாவில் இறப்பது மட்டும் தான் மனித உயிர்களா? தமிழ் ஈழத்தில் இறப்பதும் தான்...
மனிதபிமனத்தோடு எண்ணிப்பாருங்கள் ஒரு மானுட இனத்தையே வேரறுக்க பார்க்கும் சிங்கல வெறித்தனத்தை...
Thursday, August 16, 2007
அவள் ஒரு நிலா
ஆண்டவனே பிடிக்காதெனினும்
அவளுக்காக அர்ச்சனை செய்ய
அன்று ஆலயம் சென்றேன்...
அர்ச்சகர் கேட்டார்
"அவள் என்ன நட்ச்சதிரம்?" என்று,
பாவம், அவருக்கெப்படி தெரியும்
அவளொரு நிலவென்று!!!
அவளுக்காக அர்ச்சனை செய்ய
அன்று ஆலயம் சென்றேன்...
அர்ச்சகர் கேட்டார்
"அவள் என்ன நட்ச்சதிரம்?" என்று,
பாவம், அவருக்கெப்படி தெரியும்
அவளொரு நிலவென்று!!!
Subscribe to:
Posts (Atom)
