Showing posts with label சரவணன் பொன்முடி. Show all posts
Showing posts with label சரவணன் பொன்முடி. Show all posts

Wednesday, April 27, 2011

இலங்கை போர் குற்றவாளி -ஐநா ,அப்போ இந்தியா???

ஈனம் கெட்ட இத்தாலிக்காரியின்
எண்ணம் ஈடேற...
மானம்கெட்ட மலையாளிகள் ரெண்டுபேர்
மார்க்கம் சொல்ல...
பல்லை இலித்துக்கொண்டு பார்த்திருந்தான்
'ப'ச்சை தமிழனொருவன்
சிறப்புடனே 'சிங்' கும் தானே செய்து முடித்தான் -அங்கே
அப்பாவி தமிழர்கள் அழிய தானே
அரசபக்ஷே போர் தொடுத்தான்...

அட்டூழியத்தை ஐநாகாரன் அம்பலபடுத்த...
அதனால அரசபக்ஷே அதிர்ந்துபோக...
தோள் கொடுக்க போகுதாங்க
நம்ம தேசம்...

அரசபக்ஷே அப்பாவின்னு...
அகிலத்த நம்பவைக்க ...
ஆதரவு திரட்டுதுங்க
நம்ம தேசம்...

நம்புங்க தமிழர்களே...
நாமெல்லாம் இந்தியர்களாம்!!!





Monday, February 7, 2011

ஒன்றுபடு தமிழா... வென்றெடு தமிழியம்...

முட்கம்பிகளையும் முகாம்களையும் எங்களவனுக்கு சொந்தமாக்கி
முல்லைத்தீவும் மட்டக்களப்பும் சிங்களவனுக்கு சொந்தமாக்கி
முடிந்துவிட்ட தெம்மினம் என்று முகாரி பாடும் மூடர்களுக்கு
முடிவொன்று கட்டிடவே முழங்கிடுவோம் தமிழா ...

சொந்த நாடுகேட்டு நின்ற இனம் -இன்று
சோறு கேட்டு நின்ற பின்னும்
சொரனையற்று போனோமடா  தமிழா -அன்று
அதிகார பகிர்வு கேட்ட இனம்
ஆடை கேட்டு நிற்கிறதே -இனியும்
அடிமைப்பட்டு கிடப்பதோ நாம் தமிழா

இனமும் மொழியும் இருகண்கள்
என நம்மை வளர்த்தாரடா தமிழா
இதையும் இழந்து அதையும் இழந்து
இருகண் இல்லா இந்தியன் என்பதில்
என்ன பயன் கண்டாய்?
ஆண்டவனும் ஆள்பவனும் நம்மை
அடகு பொருளாய் மாற்றியதை தவிர...

உழைப்பை சுரண்டும் ஊழல் முதலைகளின்
இந்திய அரசியல் சாசனம் என்னும்
அடிமை விலங்கை அறுத்தெறிய
ஒன்றுபடு தமிழா வென்றெடு தமிழியம்.

 

Friday, September 3, 2010

தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?


வங்கக் கடல் மீது
தங்கத் தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்
சங்கறுத்துக் கொல்கிறது
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

வலைவீசி மீன்பிடிக்க
அலைமீது சென்றவனின்
தலைமீது குண்டுவீசும்
கொலைச் செயலும் நடக்கிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

நாவாய் படைநடத்தி
நாடுகளை வென்ற இனம்
நாள்தோறும் அகதிகளாய்
நாடிழந்து வருகிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

ஆடையை உலகுக்கு
அறிமுகம் செய்தவனை
ஆடையவிழ்த்து அம்மணமாய்
அடித்து சுட்டுக் கொல்கிறான்
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

Tuesday, January 5, 2010

நம்பிக்கை

என் குழந்தையை வானில் தூக்கிப்போட்டேன்
அவள் சிரித்துக்கொண்டே என் கையில் தஞ்சமானால்...

Tuesday, February 3, 2009

செவிடாய் போன உலகமே...

சிறிலங்காவின் பீரங்கி சப்தத்தில் செவியிழந்த போன உலகமே
எங்களின் ஈழத்து நண்பர்களின் ஓலக்குரல் உனக்கு கேட்கவில்லையா?
பாலஸ்தீனத்தில் வெடிப்பது மட்டும் தான் குண்டா? ஈழத்தில் வெடிப்பதும்தான்...
காசாவில் இறப்பது மட்டும் தான் மனித உயிர்களா? தமிழ் ஈழத்தில் இறப்பதும் தான்...
மனிதபிமனத்தோடு எண்ணிப்பாருங்கள் ஒரு மானுட இனத்தையே வேரறுக்க பார்க்கும் சிங்கல வெறித்தனத்தை...